உகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரஸுக்கு பலி

0 2833

சீனாவின் உகான் நகர மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார்.

உகானிலுள்ள உசாங் மருத்துவமனை இயக்குநரும், நியூரோ சர்ஜனுமான லியு ஜிமிங் வைரஸ் தாக்கி இன்று காலை உயிரிழந்தார். இதை சீன அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது.

உகானில் வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசால் அறிவிக்கப்பட்ட 7 மருத்துவமனைகளில் உசாங் மருத்துவமனையும் ஒன்று. அந்த மருத்துவமனையின் இயக்குநரே கொரானா வைரஸுக்கு உயிரிழந்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments