ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட கோயில்கள் புனரமைத்து கட்டப்படும்: அமித் ஷா
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் புதுப்பித்து கட்டப்படும் என்றும், பண்டிட்டுகளுக்காக புதிதாக 10 சிறப்பு நகரங்கள் கட்டமைக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
டெல்லியில் அவரை காஷ்மீரை சேர்ந்த பண்டிட் குழுவினர் சந்தித்தனர். அப்போது அவரிடம், பண்டிட்டுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கேட்ட அமித் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 10 மாவட்டங்களிலும் பண்டிட்டுகளுக்காக 10 புதிய நகரங்கள் கட்டமைக்கப்படும் எனவும், தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட, சேதபடுத்தப்பட்ட கோயில்கள் புதுப்பித்து கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.
Comments