புதிய சாதனை படைத்த விராட் கோலி.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ

0 888

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, பிரபல சோஷியல் நெட்ஒர்க் சேவையான இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார்.

விராட் கோலி இதுவரை 932 இன்ஸ்டாகிராம் பதிவுகள், இரண்டு ஐஜிடிவி வீடியோக்கள் பதிவிட்டுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் 148 பேரைப் பின்தொடர்கிறார்.உலகளாவிய பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான Duff and Phelps நடத்தியுள்ள ஆய்வின் படி, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பிராண்ட் மதிப்பீட்டு பட்டியலில் 31 வயதான கோலி முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தியாவில் கோலிக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ளனர் நடிகை பிரியங்கா சோப்ரா. சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் மிக அதிக ஃபாலோயர்களை பெற்று, முதல் இடத்தில இருப்பவர் நட்சத்திர கால் பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை குவித்துள்ள கோலி, தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் என்னை பலரும் நேசிக்கிறார்கள், ஆதரவு தருகிறார்கள். நான் என்ன செய்தாலும் பாராட்டுகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கடவுள் மிகவும் அன்பானவர். நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன் என்று கோலி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments