ரயில் சாகசம் செய்த டிக்டாக் இளைஞன்..வீடியோவை பகிர்ந்து ரயில்வேதுறை அமைச்சர் அறிவுரை
ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்து தவறி விழுந்த இளைஞர் நூலிழையில் உயிர்பிழைத்த பதைபதைக்க வைக்கும் டிக்டாக் வீடியோவை பகிர்ந்துள்ள ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல், அனைவரும் விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
சக பயணியால் டிக்டாக்கில் பதிவு செய்யப்பட்ட 7 விநாடி நீளம் கொண்ட அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்த இளைஞர், பக்கவாட்டில் தவறி விழுகிறார். ரயிலின் அடியில் சிக்கிவிடுவது போல் விழுந்ததால் சக பயணிகள் பயத்தில் கூச்சல் எழுப்ப, அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் நூலிழையில் உயிர்பிழைக்கிறார்.இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஓடும் ரயிலில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவது வீரம் அல்ல முட்டாள்தனம் என்று பதிவிட்டுள்ளார்.
चलती ट्रेन में स्टंट दिखाना बहादुरी नही, मूर्खता की निशानी है। आपका जीवन अमूल्य है, इसे खतरे में ना डालें।
नियमों का पालन करें, और सुरक्षित यात्रा का आनंद लें। pic.twitter.com/tauidfOqRj
चलती ट्रेन में स्टंट दिखाना बहादुरी नही, मूर्खता की निशानी है। आपका जीवन अमूल्य है, इसे खतरे में ना डालें।
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 18, 2020
नियमों का पालन करें, और सुरक्षित यात्रा का आनंद लें। pic.twitter.com/tauidfOqRj
Comments