சி.ஏ.ஏ, என்.பி.ஆர் அமல்படுத்துவதற்கு தடையில்லை என உத்தவ் தாக்கரே கருத்து
மகாராஷ்டிராவில், என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை என்றும், அது ஒரு வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் போன்றது தான் என்றும், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மேலும், சிஏஏ என சுருங்க அழைக்கப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி, யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
என்.பி.ஆர், கணக்கெடுப்பால் யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இருப்பினும், என்.ஆர்.சி எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருபோதும் மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அதனால், முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்துக்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments