தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் மேல்முறையீடு

0 922

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

எம்சாண்ட் வாங்கியதில் 1000 கோடி ரூபாய் ஊழல் எனக் கூறி, உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டதாக கடந்த ஆண்டு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் 24ம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனுதாக்கல் செய்துள்ள ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் மக்களுக்கு முறைகேடுகளை தெரியப்படுத்தவே அறிக்கை வெளியிட்டதாகவும், டெண்டர் முறைகேடு வழக்கை திசை திருப்பவே தன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே இவ்வழக்கை ரத்து செய்வதோடு, வரும் 24ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments