கொரோனா வைரஸ் எதிரொலி - பொள்ளாச்சியில் தென்னை நார் வர்த்தகம் பாதிப்பு

0 1303

சீனாவில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், பொள்ளாச்சியில் தென்னை நார் பொருள் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து சீனாவுக்கு 100 கண்டெய்னர்களில் கடந்த டிசம்பர் மாதம் தென்னை நார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அங்கு திடீரென கொரானா வைரஸ் பாதிப்பால் துறைமுகங்கள் மூடப்பட்டு, பல ஆயிரம் டன் நார் போய்ச்சேர்ந்ததா என்ற தகவல் தெரியாமல் கவலையடைந்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, அனுப்பிய நாருக்கான பணமும் வராதநிலையில், கடந்த 30 நாட்களில், ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments