இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே - அமைச்சர்

0 1150

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, மத்திய அரசே மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என அவைக்கு அமைச்சர் பாண்டியராஜன் தவறான தகவலை கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு என தெரிவித்தார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments