பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியீடு

0 1647

நடப்பு கல்வியாண்டில் 25 லட்சத்து 87 ஆயிரத்து 9 மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ், பொதுத்தேர்வை எழுத உள்ளதாக தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

நடப்பாண்டில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில், 10-ம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், 11-ம் வகுப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 பேரும், 12-ம் வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 பேரும், பொதுத்தேர்வை எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதனிடையே, 10,12-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக புதிய பாடத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் பொதுத்தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments