தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி வழக்கு

0 1075

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சீருடைப்பணியாளர் தேர்வாணைய தேர்வில், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் தேர்வானதாகவும், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற அவர்கள் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை விட சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படும் அதனை மாநில காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்றும், எனவே இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments