இந்தியா - பாக்,. இடையே கிரிக்கெட் வேணாம்னா, இதுவும் வேணாம்.. அக்தர் காட்டம்

0 1267

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இதே கருத்தை வலியுறுத்தி தனது யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வீடியோவில் பேசியுள்ள ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர், இந்தியா - பாகிஸ்தான் இடையே பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. ஆனால் ஆசியாவின் இரு முக்கிய நாடுகளுக்கிடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.இரு நாடுகளிடையே ஒரு சில விளையாட்டு போட்டிகள் தடையின்றி நடைபெறும் போது, இருதரப்பு கிரிக்கெட் தொடரை மட்டும் நடத்தாமல் புறக்கணித்து வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

imageதொடர்ந்து பேசியுள்ள அக்தர், அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இணைந்து டேவிஸ் கோப்பை டென்னிஸ் விளையாடலாம், கபடி விளையாடலாம், ஆனால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்க கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. உறவுகளை குறைத்து கொள்ள நினைத்தால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை நிறுத்தி கொள்ள வேண்டியது தானே.

ஏன் கிரிக்கெட்டை குறி வைக்கிறீர்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலுமே கிரிக்கெட் அரசியலாக பார்க்கப்படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் நாட்டில் விருதோம்பல் எப்படி இருக்கும் என்பதை முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களிடம் கேளுங்கள். இரு நாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கப்பட கூடாது.

imageஇந்தியா - பாகிஸ்தான் இடையே வெங்காயம், தக்காளி மற்றும் பல வர்த்தகங்கள் தங்கு தடையின்றி நடக்கிறது. ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி கொள்கிறோம். ஆனால் இருதரப்பு கிரிக்கெட் மட்டும் விளையாட முடியவில்லை.

தற்போதய சூழலில் பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியும், இந்தியாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் வருவதற்கான சுமூக சூழல் இல்லை என்பது புரிகிறது. ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் போல வேறு ஒரு நடுநிலையான நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்தலாமே என்று யோசனை தெரிவித்துள்ளார் அக்தர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments