விஜய் மல்லையா மனு மீதான விசாரணை: உச்சநீதிமன்றம் ஒத்தி வைப்பு
தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக (fugitive economic offender) அறிவித்து சொத்துகளை முடக்கும் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடைகோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்திய வங்கிகளில் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாததுடன், கடந்த 2016ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் விஜய் மல்லையா தஞ்சமடைந்தார்.
வங்கிகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத் துறை, மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து, சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு தடை கோரி மல்லையா, உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்தார். அந்த மனுவை இன்று பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஹோலி பண்டிகைக்கு பிறகு மார்ச் மாதத்துக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
Comments