ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பது எப்படி ?
மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் 31க்குப் பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பது எப்படி என பார்க்கலாம்
இணைப்பது எப்படி
https://bit.ly/3bLI2eL என்ற url - ஐ கிளிக் செய்யவும்
மேற்கண்ட திரையில் இருக்கும் புகைப்படம் காண்பிக்கும்,
அதில் கேட்கப்பட்டுள்ள பான் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யது Link Aadhaar click செய்யவும்
ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல்கள் திரையில் காண்பிக்கும்
ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. மேலும் 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட உள்ளன.
Comments