நட்சத்திர ஓட்டல்கள் குறைந்த வருவாய் காட்டி வரி ஏய்ப்பு செய்வதாகப் புகார்
நட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த சொத்து வரி வசூலித்ததால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனியார் அமைப்பு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ஒரு நாள் இரவு தங்குவதற்காக 3 முதல் 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர ஹோட்டல்கள் அறைகளுக்கான உண்மையான கட்டண விவரங்களை மறைத்து குறைந்த கட்டணத்தைக் காட்டி அதனடிப்படையில், வரி செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இதே பாணியில் திருமண மண்டபங்களிலும் வரி மோசடி நடைபெறுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை மாநகராட்சி சொத்துவரி விவகாரம் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரைத்தனர்.
Comments