கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமெரிக்காவின் மிசிசிபி மாநிலம்
அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தலைநகரான ஜாக்சன்(Jackson) மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கியதால், வரலாற்றில் 3வது முறையாக பேர்ல்(pearl) நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நீர் தேக்கத்தில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் நகரின் தாழ்வான இடங்கள் அனைத்தும் மூழ்கின. இதில் சிக்கிய பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Comments