அயலான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

0 1811

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் (24 AM Studios) இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் அயலான் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங்கும், முக்கிய கதாபாத்திரத்தில் இஷா கோபிகரும் நடிக்கின்றனர்.

வேற்றுகிரக வாசி, சிவகார்த்திகேயன் இடையேயான நட்பை மையமாகக் கொண்டு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் புல் தரையில் சிவகார்த்திகேயனும், வெளி கிரக வாசியும் படுத்திருப்பது போன்ற காட்சி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments