12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

0 1022

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடையலாம் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அளிக்கக்கூடிய வகையில் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments