பூரண மதுவிலக்கு என்பதே தமிழக அரசின் கொள்கை - அமைச்சர்
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, பூரண மதுவிலக்கே தங்கள் கொள்கை என்றும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 6 ஆயிரத்து 815 கடைகளில் ஆயிரம் கடைகள் ஐநூறு ஐநூறாக மூடப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் தங்கமணி, மது விலை உயர்ந்துள்ளதால் தான் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
Comments