இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என அமைச்சர் தவறான தகவல் - துரைமுருகன்

0 859

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தவறான தகவலை அளித்ததாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்த பின்பும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுறுமை தரப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறுவது ஏற்புடையதாக அல்ல என்றார்.

மேலும் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசின் கேள்விக்கு தொடர்பில்லாத தகவல்களை அளித்து அமைச்சர் பாண்டியராஜன் அவையை திசை திரும்பியதாகவும் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

 

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments