தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை தமிழகத்தில் இல்லை - அமைச்சர்

0 1147

தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை தமிழகத்தில் இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், அரசு நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையை பல்கலைக்கழக அளவில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற நிலைமையை மாற்றி, மருத்துவியல், கல்வெட்டுயியல், தொல்லியல், வானவியியல் என 10 க்கும் மேற்பட்ட துறைகளை தமிழில் நடத்தி வேலை வாய்ப்புக்கான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments