ஊர் செல்ல எந்த வண்டியும் கிடைக்காததால் அரசு பேருந்தை திருடி ஊருக்கு ஓட்டிச் சென்ற நபர்

0 4818

தெலுங்கானா மாநிலத்தில் பணிமுடிந்து ஊர் செல்ல எந்த வண்டியும் கிடைக்காததால்,  அரசு பேருந்தை  ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகராபாத்திலுள்ள (Vikarabad) பேருந்து நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், பணி முடிந்து ஊருக்கு செல்ல காத்திருந்தார். அப்போது அவ்வழியே எந்த பேருந்தும், வாகனங்களும் வரவில்லை.

இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்தை திருடி ஓட்டிச் சென்று தாம் செல்லும் இடம் வந்ததும், அதை நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். அந்த பேருந்தை காணாததை வைத்து விசாரித்து, இந்த திருட்டை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments