அயனாவரம் சிறுமி வழக்கில் 5 ஆண்டு தண்டணையை எதிர்த்து ஒருவர் மேல்முறையீடு

0 740

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர், அதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். 

 இந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரில் ஒருவரான உமாபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எலக்ட்ரீசியனான தன்னை, பிளம்பர் என குறிப்பிட்டுள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம் பெறாத நிலையில் சிறுமியின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments