3 மாத கைக்குழந்தை, 3 வயது மகனுடன் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை

0 1076

சென்னை ஆவடியில் குழந்தையை யாருடன் படுக்கவைப்பது என்ற தகராறு காரணமாக 3 மாத கைக்குழந்தை மற்றும் 3 வயது மகனுடன் ரயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் முத்துமாரிக்கும் அவரது காதல் மனைவி விஜயலட்சுமிக்கும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகளை யாருடன் படுக்க வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக முத்துமாரியின் தங்கைக்கும் விஜயலட்சுமிக்கும் நேற்று மாலை தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோபித்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய விஜயலட்சுமியை ஆவடி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்துக்கல்லூரி ரயில் நிலையம் அருகே விஜயலட்சுமியும் அவரது 2 குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments