கொரோனா வைரஸால் ஐபோன் தயாரிப்பு, விற்பனை பாதிப்பு
சீனாவில் கொரானா வைரஸால் ஐபோன் தயாரிப்பு, விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதால், 2ம் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்ட முடியாது என முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுக்கு அடுத்து சீனாவில்தான் ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐ-போன் தயாரிப்பு கூடங்கள் அனைத்தும் வைரஸ் அதிகம் பரவியுள்ள ஹூபே மாகாணத்துக்கு வெளியே இருந்தபோதிலும், அங்கு உற்பத்தி பணி மெதுவாகவே நடப்பதாக கூறியுள்ளது.
சீனாவிலுள்ள 42 சில்லரை விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும், சில நிலையங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டதாகவும், எனவே சீனாவில் ஐ-போன் விற்பனை குறைந்து விட்டதால் வருவாய் இலக்கை எட்ட முடியாது என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments