தமிழகத்தில் 43 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வு
தமிழகத்தில் 43 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் பதவி உயர்வு அடிப்படையில் காலியாகவுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்களை சுட்டிக்காட்டி, 2020-21ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதில் 4 டிஜிபி பணியிடங்கள் நிரப்ப அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவில், 43 இடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், அதில் விதிப்படி 3 டிஜிபி பணியிடங்களை மட்டும் நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகரன் நேற்று நடத்திய ஆலோசனையில் 43 பேருக்கும் பதவி உயர்வு, ஒதுக்க வேண்டிய பணியிடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments