ஓடும் பேருந்தில் திடீரென தீ; கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
சேலம் அருகே கந்தம்பட்டியில் ஓடும் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் கண்ணாடிகள் வெடித்து சிதறிய நிலையில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
வேம்படிதளத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதை கண்டு உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கச் சொல்லி உஷார் படுத்தினார்.
பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிக்கொண்டிருக்கும்போது பேருந்தில் தீப்பற்றி மளமளவெ பரவத்தொடங்கியது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைந்தனர்.
இந்த நிலையில், பேட்டரிக்கும் டீசல் டேங்கருக்கும் இடைப்பட்ட ஒயர் உராய்வு காரணமாக பேருந்து தீப்பற்றியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments