கறிக்கோழி வழியாக கொரோனா பரவுமா..? வீழ்ந்த விற்பனை
கறிக்கோழி வழியாக கொரோனா பரவும் என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்திய கோழிப்பண்ணைத் தொழில் சுமார் ஆயிரத்து 310 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சராசரியாக 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழியின் பண்ணை விலை கொரானா புரளியை தொடர்ந்து கிலோவுக்கு 35 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் பண்ணையாளர்களுக்கு தினமும் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மகாராஷ்டிர கோழிப்பண்ணையாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் கணக்கிடும் போது இந்த இழப்பு பலமடங்காக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோழி விற்பனை இதே நிலையில் தொடர்ந்தால், பண்ணையாளர்கள் தங்களது உற்பத்தியை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதுடன், வரும் ஏப்ரல் மாதம் முதல் கறிக்கோழி விலை எகிறும் என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments