மசூத் அஸார், குடும்பத்தினருடன் பகவால்பூரில் இருப்பதாக தகவல்..?
ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை என்றும், பகவால்பூரில் குடும்பத்தினருடன் பத்திரமாக இருக்கிறான் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான 2 வழக்குகளில் தலா ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், அவன் காணாமல் போய் விட்டதாக பாகிஸ்தான் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹம்மத் அஸார் (Hammad Azhar) அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவன் காணாமல் போகவில்லையென்றும் பகவால்பூரில் உள்ள ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பின் புதிய தலைமையகமான மர்காஸ் உஸ்மான் ஓ அலி ( Markaz Usman-o-Ali) கட்டடத்தில் குடும்பத்தினருடன் இருக்கிறான் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Comments