ரயில் நிலையங்களில் இலவச வைஃபை இணைப்பை நிறுத்த முடிவு

0 1468

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி நைஜீரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ரயில் நிலையங்களில் இணைய சேவை பயன்பாட்டிற்காக இலவச வைஃபை இணைப்பை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக இந்தச் சேவை பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து blog-ல் எழுதியுள்ள கூகுளின் துணைத் தலைவர் சீசர் குப்தா, உலகிலேயே அதிகம் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், விலை குறைந்த இணைய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் போன் மூலம் எளிதில் இணையத்தைப் பயன்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments