ரூ.3.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த ரூபாய் 3 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆயத்த ஆடை நிறுவனங்களின் பெயரில் வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனக்கிடங்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, ஆயத்த ஆடைகள் பெயரில் கட்டப்பட்டிருந்த பார்சலில், ரிப்பன் ரோல்களுக்குள் மறைத்து 57 பிளாஸ்டிக் பொட்டலங்களில் வெள்ளை நிற படிகத்தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையில், அவைகள் மீத்தாகுவாலோன் (methaqualone)என்ற போதைப்பொருள் என்றும் 6 கிலோ 800 கிராம் எடை கொண்ட அதன் மதிப்பு ரூபாய் 3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. போலி முகவரி கொடுத்து பார்சலை அனுப்பியவர் குறித்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments