ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியை தாண்டிய இந்தியா-ரஷ்யா இடையேயான ராணுவ தளவாட கொள்முதல்
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான ராணுவ கொள்முதல் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியை தாண்ட உள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
லக்னோவில் அண்மையில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில், ரஷ்யாவில் இருந்து பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா வாங்குவதற்கான 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதன்படி எஸ்.200 வான் தாக்குதல் எதிர்ப்பு உபகரணங்கள், காமோவ் (Kamov) ஹெலிகாப்டர்கள், கலக்ஷினிகோவ் (Kalashnikov) துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை குறித்த சமயத்தில் வழங்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து 200 Ka-226 ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எஸ்-400 ரக வான் தாக்குதல் எதிர்ப்பு உபகரணங்களை வாங்க முதற்கட்ட தொகையையும் செலுத்தியுள்ளது.
Comments