இட ஒதுக்கீடு என்பது பிச்சை பெறுவதல்ல - மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்

0 1728

இட ஒதுக்கீடு என்பது பிச்சை எடுப்பது போன்றது அல்ல என்றும் அது அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டது என்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியிருக்கிறார்.

அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்பது அடிப்படை உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி அளித்த தீர்ப்பு குறித்து செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயர்சாதி பிரிவினரில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டதிருத்தம் செய்ததை சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த அடிப்படை உரிமையை எந்த அரசும் பறிக்காது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு வெளிவந்த பிறகு பட்டியல் இனத்தை சார்ந்த 73 எம்.பிக்கள் கூடி இந்த தீர்ப்புக்கு எதிரான சட்டதிருத்தத்தை செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments