நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு

0 3983

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் வினய் சர்மா, அக்சய் தாக்கூர், பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 பேரையும், கடந்த ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிட முதன் முதலில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் சீராய்வு மனு, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு ஆகிய சட்ட வாய்ப்புகளை ஒவ்வொன்றாகவும், குற்றவாளிகள் ஒவ்வொருவராகவும் பயன்படுத்தினர். இதனால் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது இரு முறை தள்ளிப்போனது.

இந்நிலையில், குற்றவாளிகள் சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி விட்டதால், தூக்கு தண்டனை தேதியை நிர்ணயிக்குமாறு திஹார் சிறை நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments