டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்

0 812

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் (Yokohama) கொரானா தொற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் ( Diamond Princess) சொகுசுக் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

இவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்திரேலிய வட பிரதேசமான வெப்பமண்டல பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 14 நாட்கள் நோய் தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள் என்று சிட்னியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டயமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் பயணித்து ஹாங்காங்கில் இறங்கிய பயணி ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து யோகோஹாமா துறைமுகத்தில் இந்த கப்பல் கடந்த 3 ஆம் தேதி முதல் தனியிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments