பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் கைது

0 779

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த அமீர், பாசித், தலிப் ஆகிய 3 மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்த முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரி விடுதியில் இந்த 3 மாணவர்களும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதையடுத்து 3 மாணவர்களையும் தேச துரோக வழக்கில் கைது செய்த போலீசார், பல்வேறு நிபந்தனைகளுடன் அவர்களை விடுவித்தனர். ஆனால், மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்து அமைப்புகளும், வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 3 மாணவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். வருகிற மார்ச் 2ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்கவும் ஹூப்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments