பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ

0 672

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார்.

பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான அவர்களை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி கூட மன்னித்துவிட்டனர் என்றும் அவர் கூறினார். சட்டத்தின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் விடுவித்து கொள்ளலாம் என்ற நிலைக்கு அனைவருமே வந்துவிட்டதாக தெரிவித்த விஜயதாரணி, அரசு தன் கடமையை செய்ய வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments