பிச்சை எடுத்து கோவில் கட்ட 8 லட்சம் கொடுத்த முதியவர்..!

0 2849

ஏழு வருடங்களாக பிச்சை எடுத்த 8 லட்சம் ரூபாய் பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் "யாதி ரெட்டி" எனும் 73 வயது முதியவர். ரிக்ஷா ஓட்டுநரான இவர் முதுமையினால் உடல் ஒத்துழைக்காததால் ரிக்ஷா ஓட்டும் தொழிலை விட்டு ஒரு கோவிலின் அருகே கடந்த ஏழு வருடங்களாக பிச்சை எடுத்து வந்தார்.

இவ்வாறு பிச்சை எடுப்பதின் மூலம் வந்த பணமான 8 லட்சம் ரூபாயை அதே கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். மேலும் தான் நன்கொடை வழங்கிய பின்னர் தன்னுடைய வருமானம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் "நான் கடந்த 40 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வந்தேன் ஒரு கட்டத்தில் முதுமையின் காரணமாக என்னால் தொடர்ந்து ரிக்ஷா ஓட்ட முடியவில்லை எனவே இங்கிருந்த கோவிலில் பிச்சை எடுக்க துவங்கினேன்.

அதில் வந்த வருமானத்தில் முதலில் 1 லட்சத்தை கோவிலுக்கு நன்கொடை  வழங்கினேன், பின்னர் என் உடல் நிலை பாதிப்பால் பணத்தின் தேவை எனக்கு இருக்கவில்லை, நான்கொடை அளித்ததை பக்தர்கள் அறிந்ததால் எனது வருமானமும் அதிகரித்தது இதன் மூலம் நான் 8 லட்சம் ரூபாயை கோவிலுக்கு இதுவரை நன்கொடை அளித்துள்ளேன் என கூறினார்.வயதான இந்த முதியவரின் இந்த செயலால் கோவில் நிர்வாகமும் மக்களும் அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments