செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

0 805

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் மகாராஷ்டிராவை சேர்ந்த பால ஷாகிப் ஷிண்டே என்பவனை கைது செய்தனர்.

கைதானவன் கொள்ளையடித்த பிறகு விமானத்தில் சென்று மும்பையில் பதுங்கியிருந்துவிட்டு, மீண்டும் சென்னை வந்து கொள்ளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் அவன் மீது மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, சென்னை, தெலுங்கனா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் 25 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments