ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

0 2049

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையான ஜிப்மர், புதுச்சேரியில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு புதுச்சேரியில் 150 இடங்களுக்கும், காரைக்காலில் 50 இடங்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்ற நிலையில், மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments