தீயிலிருந்து குடும்பத்தை காப்பாற்றிய 5 வயது சிறுவன்..!
அமெரிக்காவில் தீயிலிருந்து தனது குடுமபத்தை 5 வயது சிறுவன் ஒருவன் காப்பாற்றி உள்ளான்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நள்ளிரவில் ஒரு குடும்பம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த நோவா எனும் 5 வயது சிறுவன் தீ பற்றி எரிவதை பார்த்து சற்றும் தாமதிக்கமால் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த தனது 2 வயது தங்கையை அருகே இருந்த ஜன்னல் வழியாக இறக்கி காப்பாற்றி உள்ளான்.
மேலும் சிறிதும் பயப்படாமல் பக்கத்துக்கு அறையில் தூங்கி கொண்டிருந்த தனது அப்பா மற்றும் உறவினர்களையும் தன் வளர்ப்பு நாயின் உதவியுடன் எழுப்பி அனைவரின் உயிரையும் காப்பாற்றினான். சிறுவனின் இந்த தைரியத்தையும் சாதூர்யத்தையும் அந்த ஊர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் அந்த சிறுவனின் தந்தையும் உறவினர்களும் நோவாவை தங்களது குடும்பத்தின் ஹீரோ எனவும், சிறுவன் தங்களை எழுப்பாமல் இருந்தால் தாங்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டோம் என உருக்கமாக தெரிவித்தனர்.
Comments