அமலுக்கு வரும் புதிய எஃப்சி விதிகள்

0 1437

வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும், 8 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கான எஃப்சி-யை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி இந்த வாரத்தில் அமலுக்கு வருகிறது. 

டிரக்குகள், வாடகைக் கார்கள் உள்ளிட்ட வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால் ஓராண்டுக்கு ஒருமுறை எஃப்சி எனப்படும் தகுதிச்சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். அதுவே, 8 ஆண்டுகளுக்குள் இருந்தால், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது.

image

8 ஆண்டுகளுக்குள் இருந்தாலும் ஓராண்டுக்கு ஒருமுறை எஃப்சி-யை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையை புதிய விதி மாற்றியமைக்கிறது. இதை 2 ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கும் திட்டத்தை மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் 2018ஆம் ஆண்டிலேயே முன்மொழிந்தது. இதை மற்ற மாநிலங்கள் அனைத்தும் செயல்படுத்திவிட்ட நிலையில், கடைசியாக தமிழ்நாடு செயல்படுத்துகிறது.

வாகன வல்லுநர்களை பொறுத்தவரை பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இது தேவையற்ற நடவடிக்கை என்று கூறுகின்றனர். வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்குள் இருந்தாலும் ஓராண்டுக்கு ஒருமுறை எஃப்சி புதுப்பிப்பதே சரி என வாகன வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், லாரிகளை இயக்கும் உரிமையாளர்கள் இந்த புதிய விதியை வரவேற்கின்றனர். இதன் மூலம் டிரக் ஒன்றுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகும் என தெரிவிக்கின்றனர். மேலும் புதிய விதி 8 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சம் தேவையற்றது என அவர்கள் கூறியுள்ளனர்.

image

புது வாகனங்கள் என்பதால் தேய்மானமும் பழுதும் குறைவாகவே இருக்கும் என்ற அடிப்படையில் லாரி, வாடகை கார் உரிமையாளர்கள் இந்த கருத்தை தெரிவிக்கின்றனர். இருப்பினும், அரசுப் பேருந்துகளை இதில் சேர்க்கக் கூடாது என்றும், 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசுப் பேருந்துகளுக்கு எஃப்சி-யை புதுப்பிக்கும் நிலை தொடர வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வாகன விபத்துகள் தொடர்பான புள்ளிவிவரங்களை பார்க்கும்போது புதிய வாகனங்களை அதிக விபத்தை ஏற்படுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 2018ஆம் ஆண்டில், மொத்தம் ஏற்பட்ட 63 ஆயிரத்து 900 விபத்துகளில் 38 சதவீத விபத்துகளை ஏற்படுத்தியது 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்கள் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments