சூரிய வணக்கமே மருந்து.. 101 வயது மூதாட்டி தகவல்..!

0 1416

101 வயது மூதாட்டி ஒருவர் தினமும் நாற்பது முறை சூரிய வணக்கம் செய்து வருவதால் தனக்கு எந்தவித நோயும் இதுவரை வரவில்லை என தெரிவித்து உள்ளார்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் ரத்தினகிரியை சேர்ந்த லக்ஷ்மி டாம்லே எனும் 101 வயது மூதாட்டி,தான் சிறுவயது முதல் தினமும் சூரிய வணக்கம் செய்து வருவதால் தனக்கு எந்தவித நோயும் வரவில்லை என தெரிவித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

இன்றைய காலத்தில் இளைஞர்களே தங்களது உடலை கண்காணிக்க தவறும் வேளையில் 101 வயது லக்ஷ்மி தினமும் அதிகாலை எழுந்து 40 முறை "ஓம் சூரிய நமஹா" என கூறி நன்றாக குனிந்து தரையை தொட்டு சூரிய வணக்கம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.மேலும் தான் இதுவரை நோய்க்காக எந்தவித மாத்திரைகளையும் உபயோகித்ததில்லை  எனவும் தெரிவித்தார்.

101 வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்கும் லக்ஷ்மி அவருக்கு இவ்வாறு வணக்கம் செய்ய தன் சிறுவயதில் பள்ளி ஆசிரியர் கற்றுக்கொடுத்தாகவும் அன்றிலிருந்து இந்நாள் வரை தொடர்ந்து தான் சூரிய வணக்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் அந்த மூதாட்டி தனது வேலைகளை தானே செய்து கொள்வதாகவும், அதோடு வீட்டு வேலைகளிலும் உதவி புரிவதாகவும் மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இளவயதில் உள்ளவர்களே இன்று தங்கள் உடலை காக்க சோம்பல் படும் வேலையில் 101 வயதான லக்ஷ்மி இன்னும் தளராமல் இருப்பது அனைவருக்கும் பாடம் கற்றுக்கொடுக்கும் வகையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments