இந்திய விமானப் படைக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை வழங்குகிறது ஹெச்ஏஎல்

0 1340

பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல், இந்திய விமானப் படைக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வழங்குவதற்கான 39ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ (Tejas Mark-1A) ஜெட் விமானங்களை, 49 ஆயிரத்து 797 கோடி ரூபாயில் கொள்முதல் செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்தது.

அதை தயாரித்து வழங்க வேண்டிய ஹெச்ஏஎல் நிறுவனம், 56 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என குறிப்பிட்டு ஒப்பந்த புள்ளி கோரியது. இந்த விலை வேறுபாடு காரணமாக, ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதன் விளைவாக, 17ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டு, 39 ஆயிரம் கோடி ரூபாயில் 83 தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வழங்குவது என இறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டளவில் போர் விமானங்கள் தொடர்பான மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments