ஆஸ்திரேலிய கடல் பகுதியில் பார்க்கப்பட்ட இருநிற மணல் ஆக்டோபஸ்
ஆஸ்திரேலியாவில் இருநிறம் கொண்ட மணல் ஆக்டோபஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் தென்பட்டது.
ஆக்டோபஸ்கள் பொதுவாக பாறைகள் மற்றும் செடிகளுக்கு நடுவே மறைந்திருந்து வாழ்க்கை நடத்துபவை. அங்கிருந்தபடியே தனக்கு வேண்டிய உணவை வேட்டையாடியும், எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை ஆக்டோபஸ்கள். இதேபோல் மணலில் புதைந்து வேட்டையாடியும், தற்காத்துக் கொள்ளும் திறன்கொண்ட அரியவகை ஆக்டோபஸ்களும் ஆங்காங்கே தென்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் போர்ட் பிலிப் வளைகுடா பகுதியில் சில கடலடி ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அரியவகை இரு நிறம் கொண்ட ஆக்டோபசைக் கண்டனர். அவர்களைக் கண்டதும் ஆக்டோபசும் தனது எட்டுக் கரங்களால் மணலைக் குடைந்து உடலை மறைத்துக் கொண்டது.
Comments