மது ஒழிப்பை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் - பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
மதுஒழிப்பை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறித்தியுள்ளார்.
மது இல்லாத நாடு எனும் பெயரில் பீகாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். அதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது "மது ஒழிப்பை ஒரு சில மாநிலங்களில் மட்டுமல்லாது நாடு தழுவிய அளவில் அமல்படுத்த வேண்டும்,ஏனெனில் இது மகாத்மா காந்தி பிறந்த நாடு, மதுவால் பல உயிர்கள் பறிபோகின்றன. கடந்த காலங்களில் இந்தியாவில் மது ஒழிப்பு அமலில் இருந்துள்ளது காலப்போக்கில் அதை ரத்து செய்ததாகவும்" கூறினார்.
மேலும் பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூரால் மது திணிக்கப்பட்டதாவும், மதுவை ஒழிக்க தான் 2011 முதல் திட்டமிட்டு இறுதியாக 2016 ஆம் ஆண்டு அதை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார். கடந்த 2016 முதல் இன்றுவரை பீகாரில் மதுவிற்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments