நாயைப் போல புலியை துண்டால் இழுத்த வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்
சத்தீஷ்கர் மாநிலத்தில் வனத்திற்குள் சுற்றுலா பயணிகளை புலி விரட்டிவந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராய்ப்பூரின் புறநகர் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்றனர்.
அப்போது புலி ஒன்று சுற்றுலாப் பயணிகள் இருந்த வாகனத்தின் அருகில் நின்றது. அப்போது ஒரு சுற்றுலா பயணி வாகனத்தில் இருந்து இறங்க முயன்றார். அவரைக் கண்ட புலி வாகனத்தை விரட்டியது.இதனைக் கண்ட வாகனத்தில் இருந்த வனத்துறை ஊழியர்களான நவீன் புரைனா மற்றும் ஓம் பிரகாஷ் பார்தி ஆகியோர் தோள் துண்டுகளை வீசி புலியைச் சீண்டினர்.
தொடர்ந்து துண்டைக் கவ்விய புலியை, நாய்க்குட்டியைப் போல இழுத்தனர். இந்த வீடியோ வெளியாகி, இணையத்தில் வேகமாகப் பரவியது. இதையடுத்து புலியிடம் விளையாட்டுக் காட்டிய இரு வனத்துறை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Very disappointed to see this Video from safari park Raipur, see it to belive.
Is CZA not on Twitter? The tigers in this zoo hv become dangerously used to humans and incidents like these will only make it worse. @ntca_india @AnupKNayak @moefcc pic.twitter.com/gPBZIdmLar
Very disappointed to see this Video from safari park Raipur, see it to belive.
— Randeep Hooda (@RandeepHooda) February 15, 2020
Is CZA not on Twitter? The tigers in this zoo hv become dangerously used to humans and incidents like these will only make it worse. @ntca_india @AnupKNayak @moefcc pic.twitter.com/gPBZIdmLar
watch polimer news online: https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg
Comments