ராகுல் காந்தியின் செய்கையால் மனம் வேதனைப்பட்ட மன்மோகன்சிங்

0 2617

ராகுல் காந்தியின் நெருக்குதலால் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அப்போதைய மன்மோகன்சிங் அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி தண்டனையை எதிர்த்து எம்பிக்களும் எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு தடை பெற்றால் அவர்கள் சம்பளம் பெறாமல் , வாக்களிக்கும் உரிமை இல்லாமல் பதவியில் நீடிக்க முடியும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, அவசர சட்டத்தின் நகலை கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தின்போது, அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்யவா என தம்மிடம் கேட்டதாகவும் அவசியமில்லை என தாம் கூறியதாகவும் தாம் எழுதியுள்ள Backstage: The Story behind India's High Growth Years என்ற புத்தகத்தில் மாண்டேக் சிங் அலுவாலியா குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments