மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த விவகாரம் - விசாரணை தொடக்கம்
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் உள்ள மாணவிகள் விடுதியில் 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வைத்து மாதவிடாய் சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட 68 மாணவிகளில் நேற்று 44 மாணவிகளிடம் மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மாணவிகள் விடுதியில் சேரும் போதே மாதவிடாய் காலத்தில் சமையல் அறைக்கு வரமாட்டோம், படுக்கையில் படுக்காமல் தரையில் படுப்போம் என்பது போன்ற நிபந்தனைகளில் விடுதி நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து வாங்கியிருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர் .
இந்த விடுதியின் 3 பெண் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விடுதியின் முதல்வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments