நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு எப்போது மரண தண்டனை ?
நிர்பயா கொலை தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிப்பது தொடர்பான மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதிய தேதியை விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. குற்றவாளிகளை ஒன்றாக தூக்கிலிட வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு எதிராக நிர்பயாவின் பெற்றோர் மற்றும் டெல்லி அரசு , திகார் சிறை அதிகாரிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் இட தேதி கேட்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
கடந்த ஜனவரிமாதம் 22ம் தேதி, திகார் சிறையில் நான்கு பேருக்கும் தூக்கிலிட முடிவு செய்யப்பட்ட போதும் அது பிப்ரவரி முதல்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குற்றவாளிகள் சார்பில் கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தண்டனைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். நான்காவது குற்றவாளியான பவன் கருணை மனுதாக்கல் செய்யவில்லை என்பதோடு தம் வழக்கை வாதாட வழக்கறிஞரையும் நியமிக்கவில்லை.
Comments