அர்விந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி டுவிட்

0 1243

3-வது முறையாக டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து நேற்று ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார்.

 

I congratulate Shri @ArvindKejriwal on taking oath as Delhi’s CM earlier today. Best wishes to him for a fruitful tenure.

— Narendra Modi (@narendramodi) February 16, 2020 ">

இந்த விழாவில் கலந்து கொள்ள கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றதால் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில், அர்விந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments